சாலையில் சுற்றித்திரிந்த 8 மாடுகள் பிடிபட்டன


சாலையில் சுற்றித்திரிந்த 8 மாடுகள் பிடிபட்டன
x

கடலூர் மாநகர பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த 8 மாடுகள் பிடிபட்டன.

கடலூர்

கடலூர் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் கேட்பாரற்று சுற்றித்திரியும் மாடுகளால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. ஆகவே சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை மாநகராட்சி சார்பில் பிடிக்கப்பட்டு, மாட்டின் உரிமையாளர்களிடம் இருந்து அபராதத்தொகை வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இருப்பினும் மாநகர பகுதிகளில் உள்ள சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்து வந்தது. இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உத்தரவின்பேரில் நகர்நல அலுவலர் (பொறுப்பு) அப்துல் ஜாபர், துப்புரவு ஆய்வாளர் கிருஷ்ணராஜ், மேற்பார்வையாளர்கள் மதியழகன், அண்ணாதுரை மற்றும் துப்புரவு பணியாளர்கள் நேற்று கடலூர் மஞ்சக்குப்பம், புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் 8 மாடுகள் சுற்றித்திரிந்தது. இதையடுத்து அந்த 8 மாடுகளையும் ஊழியர்கள் பிடித்து, பீச் ரோட்டில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பாபு கலையரங்கத்தில் கட்டி வைத்தனர். மேலும் அந்த 8 மாட்டின் உரிமையாளர்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து இதேபோல் மாடுகளை சாலைகளில் சுற்ற விட்டால், மாடுகளை பிடித்து மாநகராட்சி சார்பில் ஏலம் விடப்படும் என்றும் எச்சரிக்கை செய்தனர்.

1 More update

Next Story