பொது இடத்தில் புகைபிடித்த 8 பேருக்கு அபராதம்
சுல்தான்பேட்டையில் பொது இடத்தில் புகைபிடித்த 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோயம்புத்தூர்
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றிய பகுதிகளில் பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அருணா உத்தரவிட்டார்.
அதன்பேரில் வட்டார மருத்துவ அலுவ லர் டாக்டர் வனிதா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், சந்தோஷ்குமார், கார்த்திக்குமார், அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட குழுவினர் சுல்தான்பேட்டை, காமநாயக்கன் பாளையம் உள்ளிட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பொது இடங்களில் புகைபிடித்து கொண்டு இருந்த 8 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், மளிகை கடைகள், பெட்டிக் கடைகள், பேக்கரிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுகிறதா? அங்கு, புகைப்பிடிக்க அனுமதிக்கப்படுகிறதா என்றும் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
Next Story