சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து
சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து.
மீனம்பாக்கம்,
கனமழை காரணமாக சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று அதிகாலை 4.55 மணிக்கு ஐதராபாத் செல்ல வேண்டிய விமானம், காலை 6.15 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய விமானம், பகல் 1.10 மணிக்கு கர்னூல் செல்ல வேண்டிய விமானம், மாலை 5.10 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய விமானம் ஆகிய 4 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
அதேபோல் அதிகாலையில் மும்பையில் இருந்து வர வேண்டிய விமானம், காலை 9.30 மணிக்கு மதுரையில் இருந்து வர வேண்டிய விமானம், மாலை 4.20 மணிக்கு கர்னூலில் இருந்து வர வேண்டிய விமானம், இரவு 8.30 மணிக்கு மதுரையில் இருந்து வர வேண்டிய 4 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மேலும் சென்னையில் இருந்து பிராங்க்பர்ட், இலங்கை, பாரீஸ், தோகா, சார்ஜா, துபாய், அந்தமான் போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.