8 ஓட்டல்களுக்கு அபராதம் விதிப்பு


8 ஓட்டல்களுக்கு அபராதம் விதிப்பு
x
திருப்பூர்


திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குமரானந்தபுரம், சிவன் தியேட்டர், ரெயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் உடுமலை நகராட்சி பகுதிகளில் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர் நேற்று 2-வது நாளாக 45-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் ஆய்வு நடத்தினார்கள்.

இதில் குளிர்பதன பெட்டிகளில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த 1½ கிலோ சவர்மா, 5 லிட்டர் தேங்காய் சட்னி, 4 லிட்டர் தயிர் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். இதுதொடர்பாக 8 ஓட்டல்களுக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 11 கடைகளுக்கு விளக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. உணவுப்பொருட்கள் தரம் குறித்த புகாருக்கு 94440 42322 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி அறிவித்துள்ளார்.


Next Story