8¾ கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
புதுக்கோட்டையில் 8¾ கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா, கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் மாவட்டத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில் மலையப்ப நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
வாலிபர் கைது
இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த கடையில் சோதனை நடத்தி 8 கிலோ 838 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடா்பாக பாரதராஜன் (வயது27) என்பவரை பிடித்து டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதராஜனை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.9ஆயிரத்து 640 ஆகும்.