8 லிட்டர் தென்னை மர கள் பறிமுதல்


8 லிட்டர் தென்னை மர கள் பறிமுதல்
x

திட்டக்குடி அருகே 8 லிட்டர் தென்னை மர கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூர்

கடலூர்:

திட்டக்குடி அருகே பெரங்கியம்- அரங்கூர் செல்லும் காட்டுப்பாதையில் சட்டவிரோதமாக தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவ்யாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையிலான தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தென்னை மர கள் விற்பனை செய்த பெண் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அங்கிருந்த 8 லிட்டர் கள்ளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து ராமநத்தம் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தப்பி ஓடிய பெண் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சிகூர் மங்கலம் நகரை சேர்ந்த செங்கேணி மனைவி செல்வி (வயது 38) என்று தெரிந்தது. இதையடுத்து தப்பி ஓடிய செல்வியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story