வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 8 பேர் தீக்குளிக்க முயற்சி


வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 8 பேர் தீக்குளிக்க முயற்சி
x

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 8 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

வேலூர்,

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 60). முன்னாள் ராணுவவீரர். தற்போது வக்கீலாகவும் உள்ளார். இவரது சகோதரர்கள், சகோதரி மற்றும் குடும்பத்தினர் 8 பேர் இன்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

குறைதீர்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காயிதே மில்லத் அரங்கம் முன்பு திடீரென அவர்கள் மறைத்து கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து 8 பேரும் உடலில் ஊற்றிக் கொண்டனர்.

பின்னர் அவர்கள் தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த போலீசார் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்கள் மீது தண்ணீரை போலீசார் ஊற்றி காப்பாற்றினர். பின்னர் அவர்களை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர்.

ஒரே நேரத்தில் 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story