மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணி பலி
போளூரில் அருகே ஹீட்டர் ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார்.
போளூர்
போளூரில் அருகே ஹீட்டர் ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார்.
8 மாத கர்ப்பிணி
போளூர் அருகே பொன்நகரை சேர்ந்தவர் சுதாகர் என்ற சுபாஷ் (வயது 25), விவசாயி. இவரது மனைவி வினோதினி (23). இவர்களின் மகன் மிதுன் (3).
வினோதினி நர்சிங் முடித்துவிட்டு போளூர் தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். தற்போது அவர் 8 மாத கர்ப்பமாக உள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை குளிப்பதற்காக வினோதினி ஹீட்டரின் சுவிட்ச் ஆன் செய்தார். அப்போது அதிலிருந்து திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
வெகு நேரம் ஆகியும் வினோதினி வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் குளியல் அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது வினோதினி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து போளூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 8 மாத கர்ப்பிணி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.