பழைய குற்றவாளிகள் 8 பேர் கைது
பழைய குற்றவாளிகள் 8 பேர் கைது செய்யப்பட்டனா்.
ஈரோடு மாநகர் பகுதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளை கண்காணிக்க கோரி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார், ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சி நகரை சேர்ந்த லக்கீஸ்வரன் (வயது 26), ஈரோடு மூலப்பாளையம் பாரதி நகர் 3-வது வீதியை சேர்ந்த ஜான் அலோசியஸ் (47) ஆகியோரையும், ஈரோடு தாலுகா போலீசார் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மேட்டுக்காடு பகுதியை சேர்ந்த இளவரசு (20), ஈரோடு சூரியம்பாளையம் ஜவுளி நகரை சேர்ந்த கார்த்தி (25) ஆகியோரையும், ஈரோடு சூரம்பட்டி போலீசார் ஈரோடு மாணிக்கம்பாளையம் ஆண்டிக்காடு காவேரி நகரை சேர்ந்த ஜோதி பிரசாந்த் (23), ஈரோடு ஆர்.என்.புதூரை சேர்ந்த மாணிக்கம் மகன் தாமோதரன் (23), ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார், ஈரோடு ஏபிடி சாலையை சேர்ந்த பாஸ்கரன் (26), ஈரோடு நாட்ராயன் கோவில் 1-வது வீதியை சேர்ந்த பிரவீன் (25) ஆகியோரையும் என மொத்தம் 8 பழைய குற்றவாளிகளை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர். கைதானவர்கள் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.