மதுவிற்ற பெண்கள் உள்பட 8 பேர் கைது


மதுவிற்ற பெண்கள் உள்பட 8 பேர் கைது
x

காரிமங்கலம் பகுதியில் மதுவிற்ற பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி

காரிமங்கலம்

காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில், இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், மணிவண்ணன் மற்றும் போலீசார் பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, ஏ.சப்பாணிப்பட்டி, காமராஜ் நகர், பேகார அள்ளி, கொட்டுமாரனஅள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக கவுரம்மாள் (வயது 60), வேடியம்மாள் (70), தனலட்சுமி (34), விஷ்ணு (32), ராஜி (60), ராஜேந்திரன் (49), போஸ் (19), சின்னசாமி (69) ஆகிய 8 பேரை போலீசார் கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து 239 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story