பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
x

பரமத்திவேலூரில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் பஸ் நிலையம் எதிரே உள்ள தென்னந்தோப்பில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பரமத்திவேலூரை சேர்ந்த சேட் (வயது 42), மாயவன் (61), குப்புசாமி (43), ரஞ்சித்குமார் (45), சந்திரன் (52), நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த சக்திவேல் (53), உழவர்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் (50) மற்றும் குப்புச்சிபாளையம் அருகே உள்ள பொய்யேரியை சேர்ந்த ஜெயக்குமார் (49) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் 8 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story