சூதாடிய 8 பேர் கைது


சூதாடிய 8 பேர் கைது
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஸ்குமார் தலைமையிலான போலீசார் வழுதூர் அருகே அலம்காட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடிய ராமநாதபுரம் மாரியம்மன்கோவில் தெரு மகிந்திரன் (வயது40), உடைச்சியார்வலசை கோபி (38), மொசுக்குடி பாண்டி (58), மதியழகன் (50), குமரையாண்டி வலசை மாரிமுத்து (38), கார்த்தி, இளையராஜா, சீனி ஆகிய 8 பேரை கைது செய்தனர். இவர்களிடம் பணம் வைத்து சூதாட வைத்திருந்த ரூ.38 ஆயிரத்து 890 மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story