மது விற்ற 8 பேர் கைது


மது விற்ற 8 பேர் கைது
x

நெல்லையில் மது விற்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவிநான்குமார் உத்தரவின் பேரில் நெல்லை மாநகரின் அனைத்து போலீஸ் நிலைய பகுதிகளிலும் நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான கடைகள் விடுமுறை தினத்தில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பாளையங்கோட்டை மணிக்கூண்டு அருகே மது விற்பனை செய்த ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த பாலன் என்ற பாலசக்தி (வயது 47), மேலப்பாட்டத்தை சேர்ந்த வரதராஜன் (31) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பாளையங்கோட்டை வாய்க்கால் பாலம் அருகே மது விற்பனை செய்த திருமால்நகரை சேர்ந்த செல்வம் (32), சந்திப்பு தைக்கா தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (37) ஆகியோரை கைது செய்தனர். இதேபோல் மேலப்பாளையம் சேவியர் காலனி பகுதியில் மது விற்றதாக தாழையூத்தை சேர்ந்த சின்னதுரை (47), நெல்லை சந்திப்பில் மது விற்ற தாழையூத்து சங்கர்நகரை சேர்ந்த சுடலை செல்வம் (21), தச்சநல்லூர் நயினார்குளம் புதிய பாலம் அருகே மது விற்ற சேந்தமங்கலத்தை சேர்ந்த மூர்த்தி (43), சிந்துபூந்துறையை சேர்ந்த சிதம்பரம் (47) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் மொத்தம் மொத்தம் 63 பாட்டில்களும், ரூ.1110-ம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story