மது விற்ற 8 பேர் கைது
மது விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூர் மாவட்ட மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், வீரராக்கியத்தை சேர்ந்த தங்கம்மாள் (வயது 59), கிருஷ்ணராய புரத்தை சேர்ந்த சந்திரா (44), முனியப்பன் (47), சண்முகலிங்கம் (65), முருகேசன் (51), ராமச்சந்திரன் (47), சரசு (71) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 56 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
குளித்தலை அருகே உள்ள தொட்டிப்பாறை பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் தனது வீட்டின் அருகில் வைத்து மது விற்ற பாப்பாத்தி (60) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 6 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story