மது விற்ற 8 பேர் கைது


மது விற்ற 8 பேர் கைது
x

மது விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் மதுவிலக்கு போலீசார் நேற்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நெரூரை சேர்ந்த சுப்பிரமணி (வயது 66), திருநெல்வேலியை சேர்ந்த சேர்மராஜ் (29), முனியப்பனூரை சேர்ந்த பழனியப்பன் (62), மண்மங்கலத்தை சேர்ந்த ராஜசேகரன் (55), பஞ்சமாதேவியை சேர்ந்த செல்வி (49), திருப்பூரை சேர்ந்த பாலசுப்பிரமணி (47), புங்கம்பாடியை சேர்ந்த கேசவன் (37), புதூரை சேர்ந்த பொன்னுச்சாமி (71) ஆகிய 8 பேர் பல்வேறு இடங்களில் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 22 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story