மது விற்ற 8 பேர் கைது
மது விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூர் மாவட்டத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கடவூரை சேர்ந்த பிரபு (வயது 33), மணப்பாறையை சேர்ந்த அழகுராஜ் (42), அரங்கராஜ் (64), அரவக்குறிச்சியை சேர்ந்த காளிமுத்து (66), வெஞ்சி மாங்கூடலூரை சேர்ந்த முருகேசன் (60), புன்னம் சத்திரத்தை சேர்ந்த திலகவதி (60), குளித்தலையை சேர்ந்த செந்தில்குமார் (47), கணபதி (43) ஆகிய 8 பேரும் பல்வேறு இடங்களில் மது விற்றதாக அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 117 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story