மதுபானங்களை பதுக்கி விற்ற 8 பேர் கைது


மதுபானங்களை பதுக்கி விற்ற 8 பேர் கைது
x

மதுபானங்களை பதுக்கி விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 53 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரூர்

கரூர் மாவட்டத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருபவர்களை போலீசார் அவ்வப்போது கைது செய்து வருகிறார்கள். அதன்படி கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் தீவிர சோதனை நடத்தினர். இதில், சுக்காம்பட்டியை சேர்ந்த மாரியாயி (வயது 48), மண்மங்கலத்தை சேர்ந்த லட்சியம் (42), பிரியா (40), ரவி (57), திருக்காம்புலியூரை சேர்ந்த முத்து கருப்பன் (46), உடையாபட்டியை சேர்ந்த அன்பரசன் (28), குளித்தலையை சேர்ந்த சசிகுமார் (28), கொக்கம்பட்டியை சேர்ந்த சரவணன் (39) ஆகிய 8 பேர் மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 53 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story