8 டன் முருங்கைக்காய் கொள்முதல்
8 டன் முருங்கைக்காய் கொள்முதல்
திருப்பூர்
வீ.மேட்டுப்பாளையம்
வெள்ளகோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் முருங்கைக்காய்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருவார்கள். அதன்படி நேற்று 8 டன் முருங்கைக்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இவற்றை வாங்குவதற்கு வெள்ளகோவில், முத்தூர், மூலனூர், சின்னதாராபுரம், வைரமடை பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர். அதன்படி ஒரு கிலோ கரும்பு முருங்கைக்காய் ரூ.14-க்கும், செடி முருங்கைக்காய் ரூ.10-க்கும், மரம் முருங்கைக்காய் ரூ.8-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. இத்தகவலை முருங்கை வியாபாரி செல்லப்பன் தெரிவித்தார்.
-----------
Related Tags :
Next Story