கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 22 Aug 2023 7:00 PM GMT (Updated: 22 Aug 2023 7:00 PM GMT)

புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தென்காசி

செங்கோட்டை:

புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

லாரியில் கடத்தல்

குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகுமார், ஜெயராஜ் மற்றும் புளியரை போலீசார் நேற்று தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வழியில் புளியரை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கேரளா மாநில பதிவு எண் கொண்ட ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அதில் தலா 40 கிலோ எடை கொண்ட 200 மூடைகளில் 8 டன் ரேஷன் அரிசி கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

டிரைவர் கைது

இதுதொடர்பாக கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மூவட்டிபுழா தாலுகா பெழகாகாபிள்ளி நாடான்செர்யில் வீட்டை சேர்ந்த அஜூ (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

இதுதவிர நெல்லை பேட்டையை சேர்ந்த முன்னா முகமது (30), சித்திக், ஷேக் மற்றும் கேரளாவை சேர்ந்த அன்சில் ஆகிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story