வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள் 80 ேபர் கைது
விவசாய கடனுக்காக அரசு உதவி திட்ட பணத்தை பிடிப்பதை கண்டித்து திருச்சியில் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 80 ேபர் கைது செய்யப்பட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளு, முள்ளு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாய கடனுக்காக அரசு உதவி திட்ட பணத்தை பிடிப்பதை கண்டித்து திருச்சியில் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 80 ேபர் கைது செய்யப்பட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளு, முள்ளு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் வாங்கிய கடனுக்காக பிரதமர் மோடி வழங்கிய பென்ஷன்பணம், ஊனமுற்றோர் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, 100 நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட அரசு உதவி திட்ட பணத்தை வங்கிகள் பிடித்தம் செய்கிறது. மேற்கண்ட திட்டங்கள் வாயிலாகவரும் பணத்தை பிடிக்கக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தபோதிலும், வங்கி நிர்வாகம் அதை கண்டு கொள்வதில்லை.
எனவே வங்கிகளின் இந்த நடவடிக்கையை கண்டித்து வங்கிக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்துவதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் நேற்று காலை திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு திரண்டு வந்தனர். அங்கு வங்கி முன்பு அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
போலீசாருடன் தள்ளு, முள்ளு
இதைத்தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். போலீசார் வங்கி மண்டல மேலாளரை விவசாயிகள் சந்தித்து பேசுவதற்கு அனுமதி அளித்தார். இதையடுத்து பேச்சுவார்த்தை நடந்தது. ஆனாலும் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் விவசாயிகள் தடையை மீறி உள்ளே சென்று வங்கி அலுவலகத்தை மூட முயன்றனர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டம் நடத்திய 5 பெண்கள் உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது அய்யாக்கண்ணு கூறுகையில், `ரூ.10 லட்சம் கோடி கடன் வாங்கிய கம்பெனிகளின் கடன்களை தள்ளுபடி செய்துவிட்டு, ரூ.10 ஆயிரம் கடன் வாங்கிய விவசாயிகளின் கடன்களுக்காக அரசு உதவித்திட்ட பணத்தை பிடிக்கும் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். பின்னர் கைது செய்யப்பட்டவர்களை வேனில் ஏற்றி சென்று தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அதன்பின் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.