800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவுக்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி

களியக்காவிளை,

விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜகுமார் கொண்ட குழுவினர் ஐரேனிபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால், டிரைவர் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார். இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள் தங்களது வாகனத்தில் காரை விரட்டிச் சென்றனர். அதிகாரிகள் வருவதை கண்ட டிரைவர் காப்புக்காடு பகுதியில் சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் காரை சோதனை செய்தபோது, அதில் 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர், பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை காப்புக்காடு அரசு குடோனிலும், காரை விளவங்கோடு தாசில்தார் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.


Next Story