ஜமாபந்தியில் ரூ.81¾ லட்சம் நலத்திட்ட உதவிகள்


ஜமாபந்தியில் ரூ.81¾ லட்சம் நலத்திட்ட உதவிகள்
x

கே.வி.குப்பத்தில்நடந்த ஜமாபந்தியில் ரூ.81¾ லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வழங்கினார்.

வேலூர்

ஜமாபந்தி

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் 3 நாட்கள் ஜமாபந்தி நடைபெற்றது. இதன் நிறைவுநாள் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். பயிற்சி கலெக்டர் பிரியா, ஒன்றியக் குழுத்தலைவர் லோ.ரவிச்சந்திரன், தலைமையிடத்து துணை தாசில்தார் வடிவேலு, மண்டல துணை தாசில்தார் பா.சங்கர், ஒன்றியக்குழு உறுப்பினர் சரளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் அ.கீதா வரவேற்றார்.

நலத்திட்ட உதவி

இதில் கே.வி.குப்பம், கீழூர், மேலூர், பில்லாந்திப்பட்டு, வேப்பங்கநேரி, ஆலங்கனேரி, காங்குப்பம், மேல்மாயில், மேல் மாங்குப்பம், நாகல், கீழ் ஆலத்தூர், பசுமாத்தூர், காவனூர், வடுகந்தாங்கல், விக்ரமாசி, முடினாம்பட்டு, மேல்விலாச்சூர், அன்னங்குடி, செஞ்சி, திருமணி, விழுந்தக்கால், வடவிரிஞ்சிபுரம், சோழமூர், ஒழையாத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கான 212 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டன.

முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டைகள், விவசாயக் கருவிகள், பட்டா மாற்றம் உள்பட ரூ.81 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.


Next Story