நெ.10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் 81.79 சதவீதம் வாக்குப்பதிவு


நெ.10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் 81.79 சதவீதம் வாக்குப்பதிவு
x

காலியாக உள்ள நெ.10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 81.79 சதவீதம் வாக்குப்பதிவானது. நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் வாக்களித்தனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

காலியாக உள்ள நெ.10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 81.79 சதவீதம் வாக்குப்பதிவானது. நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் வாக்களித்தனர்.

காலியான பதவிகளுக்கு தேர்தல்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு பகுதியில் நெ.10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவி, குருநல்லிபாளையம் 4-வது வார்டு உறுப்பினர் ஆகிய பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில், நெம்பர்.10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும் போட்டியிட்டனர்.

நெம்பர் 10.முத்தூர் ஊராட்சி பகுதியில் 3 வாக்குச்சாவடிகளும், குருநல்லி பாளையம் வார்டு உறுப்பினர் தேர்தலில் ஒரு வாக்குச்சாவடி என மொத்தம் 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

வெப்பநிலை பரிசோதனை

வாக்குப்பதிவு தொடங்கியபோது லேசான சாரல் மழை பெய்யத்தொடங்கியது. ஆனாலும் கிராம மக்கள் குடைகளை கையில் ஏந்தி நெம்பர்.10 முத்தூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சுறுசுறுப்புடன் வந்தனர். வாக்காளர்கள் மழையில் நனையாமல் இருக்க வாக்குச்சாவடி மையம் முன்பு பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

வாக்குச்சாவடிக்கு வந்த அனைத்து வாக்காளர்களும் வெப்ப பரிசோதனை மற்றும் முககவசம் அணிந்த பின்னரே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர். முககவசம் இல்லாமல் வந்தவர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் முககவசம் வழங்கினர். ஓட்டு போட போகும்போது வாக்காளர்கள் கையில் அணிய பிளாஸ்டிக் உறை வழங்கப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தினர். முதியவர்கள் பலர் தனது உறவினருடன் வந்து தங்களது வாக்குகளை செலுத்தி சென்றனர்.

81.79 சதவீதம் வாக்குப்பதிவு

வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி, வட்டார தேர்தல் பார்வையாளர் பாஸ்கரன் ஆகியோர் நேரில் சென்று வாக்குப்பதிவு நிலவரங்களை கண்காணித்து வந்தனர். மதியம் 1 மணி நிலவரப்படி நெம்பர் 10. முத்தூர் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 53 சதவீத வாக்குப்பதிவும், குருநல்லிபாளையத்தில் 4-வது வார்டு உறுப்பினர் பதவி தேர்தலில் 71.32 சதவீதவாக்கும் பதிவாகி இருந்தது.

6 மணி நிலவரப்பட்டி நெம்பர் 10. முத்தூர் ஊராட்சியில் தலைவர் பதவி தேர்தலுக்கு 81.79 சதவீதம், குருநல்லிபாளையம் 4-வது வார்டில் 85.29 சதவீதம் வாக்குப்பதிவானது. வாக்குப்பதிவையொட்டி கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமிபாண்டியன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story