82 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது
விராலிமலையில் 82 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை
விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விராலிமலை- புதுக்கோட்டை சாலையில் ஏ.சி.எஸ். நகரை சேர்ந்த பரமசிவம் (வயது 32), மணப்பாறை சீகம்பட்டியை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் ரீகன் பிரபு ஆகியோர் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பரமசிவத்தை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைத்திருந்த 82 கிலோ புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ரீகன் பிரபுவை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story