குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 82 பேர் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 82 பேர் கைது
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் சிறப்பு அதிரடி சோதனை நடைபெற்றது. இதில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருந்த 23 பேரும், பிரச்சினைக்குரிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சட்டவிரோதமான செயல்கள் தொடர்பான நடவடிக்கைகளில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 29 பேரும், விபசார குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரும், லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக 3 பேரும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 5 பேரும், பணம் வைத்து சூதாடிய 18 பேரும் என மொத்தம் 82 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story