மது விற்றதாக 83 போ் கைது


மது விற்றதாக 83 போ் கைது
x

குடியரசு தினத்தையொட்டி மாவட்ட முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு மது விற்றதாக 83 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

கரூர்

83 பேர் கைது

கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் குடியரசு தினவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதையடுத்து மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை தனிப்படை போலீசார் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், மாவட்டம் முழுவதும் மது விற்றதாக 83 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 1.006 மதுப்பாட்டில்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சட்ட விரோதமாக தென்னை மரத்தில் இருந்து 20 லிட்டர் கல் இறக்கி விற்ற 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், சட்ட விரோதமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோத மது விற்பனை பற்றி பொதுமக்கள் அறிந்தால் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தொலைபேசி எண்ணிற்கு 04324-296299 தகவல் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோகைமலை

தோகைமலை போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அ.உடையாபட்டியை சேர்ந்த மாரியாயி (41), போத்துராவுதன்பட்டியை செல்வராஜ் (52), கல்லடையை சேர்ந்த முத்துசாமி (62), ஜல்ஜா (33), சின்னரெட்டிபட்டியை சேர்ந்த மலர்கொடி (38), கானாபுதூரை சேர்ந்த துளசி (49), கவுண்டம்பட்டியை சேர்ந்த பழனியப்பன் (29) ஆகிய 7 பேரும் மது விற்றதாக போலீசார் கைது செய்தனர்.


Next Story