1,591 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.83¾ கோடி கடனுதவி


1,591 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.83¾ கோடி கடனுதவி
x

1,591 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.83¾ கோடி கடனுதவிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

விருதுநகர்


1,591 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.83¾ கோடி கடனுதவிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

கடனுதவி

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடனுதவி வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் இந்நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி கலையரங்கில் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மாணிக்கம் தாகூர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 1,591 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ. 83 கோடியே 79 லட்சம் கடனுதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 1989-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி மகளிர் சுய உதவி குழுக்களை தொடங்கினார்.

வலுப்ெபற்றுள்ளது

தற்போது அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் சுய உதவி குழுவினர் கூட்டமைப்பின் மூலம் அவர்களுக்கு உரிய தொழில் பயிற்சி அளித்து வருமானம் ஈட்ட ஏற்பாடு செய்து தேவையான கடனுதவி வழங்குவதால் மகளிர் சுய உதவி குழு வலுப்பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி, ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் தெய்வேந்திரன், யூனியன் தலைவர்கள் விருதுநகர் சுமதி ராஜசேகர், சாத்தூர் நிர்மலா கடற்கரை ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆறுமுகம், அருப்புக்கோட்டை சசிகலா, நகரசபை தலைவர்கள் விருதுநகர் மாதவன், அருப்புக்கோட்டை சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story