84 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


84 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-13T00:15:52+05:30)

நத்தம் அருகே கடையில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 84 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

நத்தம் அருகே வேலாயுதம்பட்டியில் உள்ள ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசுக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில ரோந்து சென்றனர். அப்போது சுரேஷ் (வயது 38), இவரது தம்பி காமராஜ் (32) ஆகியோர் புகையிலை பொருட்களை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடு்த்து போலீசார் சுரேசை கைது செய்தனர். மேலும் 84 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story