850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 4 Aug 2023 2:45 AM IST (Updated: 4 Aug 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவுக்கு கடத்த முயன்ற 850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை டி.ஜி.பி. காமினி உத்தரவின் பேரில், கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் நேற்று மதியம் கோவை மதுக்கரை-பாலக்காடு மெயின் ரோட்டில் தனியார் பள்ளி அருகில் வாகன சோதனை செய்தனர்

. அப்போது அவ்வழியாக வந்த வேனை சோதனை செய்தபோது அதில் 850 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்றது தெரியவந்தது.

விசாரணையில் வாகனத்தை ஓட்டி வந்தது சுந்தராபுரம் பிள்ளையார்புரத்தை சேர்ந்த முகமது உசேன் (வயது 36) என்பதும், ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைதுசெய்தனர். விசாரணையில், மதுக்கரை, குனியமுத்தூர் பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளா மாநிலம் கஞ்சிக்கோட்டிற்கு கடத்திச்சென்று இப்ராஹிம் ராவுத்தர் என்பவருக்கு கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் வேன் பறிமுதல் செய்யப்பட்டது.



Next Story