11-ம் வகுப்பு தேர்வில் 85.03 சதவீதம் பேர் தேர்ச்சி


11-ம் வகுப்பு தேர்வில் 85.03 சதவீதம் பேர் தேர்ச்சி
x

11-ம் வகுப்பு தேர்வில் 85.03 சதவீதம் பேர் தேர்ச்சி

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 11-ம் வகுப்பு தேர்வில் 85.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

85.03 சதவீதம் தேர்ச்சி

நாகை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வரை 11-ம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. நாகை மாவட்டத்தில் 3,221 மாணவர்களும், 3,942 மாணவிகளும் என மொத்தம் 7,163 பேர் 11-ம் வகுப்பு தேர்வு எழுதினர். அதில் 2,571 மாணவர்களும், 3,520 மாணவிகளும் என மொத்தம் 6,091 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி 85.03 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டை விட 1.54 சதவீதம் குறைவு ஆகும். கடந்த ஆண்டு 86.57 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

10 அரசு உதவி பெறும் பள்ளிகள்

நாகை மாவட்டம் செம்போடை அரசு மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அதேபோல் 10 அரசு உதவி பெறும் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.


Next Story