தமிழகத்தில் கூடுதல் விலைக்கு மது விற்பனை - 852 டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவு
விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர்களிடம் இருந்து ரூ 4.61 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது
சென்னை,
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யபடுவதாக வந்த புகாரின் அடிப்படையில் ,கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற புகாரில் தமிழகத்தில் 852 டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர்களிடம் இருந்து ரூ 4.61 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது
Related Tags :
Next Story