சென்னை சென்டிரல்-கூடூர் இடையே 130 கி.மீட்டர் வேகத்தில் 86 ரெயில்கள் இயக்கம்


சென்னை சென்டிரல்-கூடூர் இடையே 130 கி.மீட்டர் வேகத்தில் 86 ரெயில்கள் இயக்கம்
x

சென்னை சென்டிரல்-கூடூர் இடையே 130 கி.மீட்டர் வேகத்தில் 86 ரெயில்கள் இயக்கம் -தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தகவல்.

சென்னை,

தெற்கு ரெயில்வேயில் சென்னை சென்டிரல் மற்றும் கூடூர் இடையேயான வழித்தடங்களில் இயக்கப்படும் 86 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தை மணிக்கு 110 கி.மீட்டர் முதல் 130 கி.மீட்டர் வரை உயர்த்தி சென்னை கோட்டம் சாதனை படைத்துள்ளது.

இதன் தொடக்கமாக நேற்று ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12077) ரெயில் சென்னை சென்டிரலில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்பட்டு 130 கி.மீட்டர் வேகத்தில் விஜயவாடா நோக்கி சென்றது. பாதை மற்றும் அதன் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முறையான மற்றும் திட்டமிடப்பட்ட அணுகுமுறையால், இது சாத்தியமானது.

இந்த பிரிவில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தை அதிகரிப்பதன் மூலம், பயணிகள் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்களின் சராசரி வேகம் மேம்பட வாய்ப்புள்ளது. இது சென்னை, மும்பை, புதுடெல்லி, அவுரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் இடையே இயக்கப்படும் ரெயில்கள் சரியான நேரத்துக்கு சென்றடைய உதவும். இதனால் பயண நேரம் கணிசமாக குறைவதால் பயணிகள் பயனடைகின்றனர்.

சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் இதுபற்றி கூறுகையில், 'அதிகாரிகள் மற்றும் அனைத்து வேலைகளையும் முடிக்க இடைவிடாமல் உழைக்கும் ஊழியர்களை பாராட்டுகிறேன். ரெயில்களில் 130 கி.மீட்டர் வேக அதிகரிப்பின் மூலம் பயணிகள் ரெயில்களின் இயக்க நேரத்தை கணிசமாக குறைக்கப்படுகிறது. அதோடு ரெயில் சேவைகளை சீராக இயக்க இது வழிவகுக்கும்.' என தெரிவித்தார்.

இவ்வாறு தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story