கிச்சிப்பாளையத்தில்87 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


கிச்சிப்பாளையத்தில்87 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

கிச்சிப்பாளையத்தில் 87 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம்

சேலம்

சேலம் களரம்பட்டி பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிச்சிப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று மாலை களரம்பட்டியில் குணசீலன் (வயது 32) என்பவருக்கு சொந்தமான வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, அவரது வீட்டிலும், அருகில் மளிகை கடை நடத்தி வரும் தர்மன் (44), ஜெய்குமார் (43) ஆகியோரின் கடைகளிலும் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 87 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தர்மன், குணசீலன், ஜெய்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் இருந்து இவர்கள் புகையிலை பொருட்களை கடத்தி வந்து சேலத்தில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story