மூதாட்டியிடம் ரூ.87 லட்சம் மோசடி


மூதாட்டியிடம் ரூ.87 லட்சம் மோசடி
x

திருச்செங்கோட்டில் மூதாட்டியிடம் ரூ.87 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவனத்தினரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

நாமக்கல்

மூதாட்டி புகார்

திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனியை சேர்ந்த மூதாட்டி இந்திராணி (வயது65) நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை நேற்று கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் எனது வயோதிகம் மற்றும் உடல் நோய்களின் காரணமாக வீட்டில் இருந்து வருகிறேன். எனக்கும், என் குடும்பத்திற்கும் 50 ஆண்டுகளுக்கு மேலாக நன்கு அறிமுகமானவர், திருச்செங்கோட்டில் வசித்து வருகிறார். அவரது குடும்பத்தினர் எங்களிடம் வந்து, நிதி நிறுவனம் நடத்தி வருகிறோம். எங்களிடம் முதலீடு செய்தால், அதற்கு உரிய வட்டி தருவதாகவும், முதலீடு தொகையை கேட்கும்போது திருப்பி தருவதாகவும் உறுதி அளித்தனர்.

அதை நம்பி நான் கடந்த 2012-ம் ஆண்டு ரூ.6.50 லட்சம் முதலீடு செய்தேன். அதற்கு ஆதாரமாக 'பிராமிசரி' நோட்டு கொடுத்தனர். எனவே மேலும் லட்சக்கணக்கில் முதலீடு செய்தேன். கடந்த 10 ஆண்டுகளில் முதலீடு செய்த தொகை அவரிடம் ரூ.87 லட்சம் இருந்தது.

கோடிக்கணக்கான ரூபாய் மோசடி

இந்த நிலையில், நான் தீவிர மருத்துவ சிகிச்சையில் இருந்ததால், முதலீட்டு தொகையை தரும்படி பல முறை கேட்டும் தட்டிக்கழித்து வருகின்றனர். தற்போது அவர்கள் என்னை ஏமாற்றும் நோக்கில் செயல்படுகின்றனர்.

என்னை போல், பலரிடமும் முதலீடு பெற்று, பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்து உள்ளது தெரிய வந்துள்ளது. எனது முதலீட்டு தொகை திருப்பி தராமல் ஏமாற்றி வரும் நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்து, எனது தொகையை திரும்ப பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் 10-க்கும் மேற்பட்டோர், அந்த நிதி நிறுவனத்தினர் மீது நேற்று நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் மனு அளித்தனர்.

1 More update

Next Story