கரூரில் 8-வது நாளாக வருமான வரித்துறை சோதனை..!


கரூரில் 8-வது நாளாக வருமான வரித்துறை சோதனை..!
x

கரூரில் 8-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர்,

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார், அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள், கல்குவாரிகள் உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 26-ம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 26-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார் சேதப்படுத்தப்பட்டது. அதிகாரிகளும் முற்றுகையிடப்பட்டனர். அங்கு நிலவிய அசாதாரண சூழ்நிலையை உணர்ந்து கொண்டு சோதனையை கைவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர் இதனைத்தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்புடன் 27-ந்தேதி முதல் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் கரூரில் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தொடர்புடைய இடங்களில் தொடர்ந்து 8-வது நாளாக இன்றும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 28 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், இன்று மேலும் பல இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தொடர் சோதனையால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 More update

Next Story