அமைச்சர் சிவசங்கருக்கு எதிரான 9 வழக்குகள்... சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
அமைச்சர் சிவசங்கருக்கு எதிரான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் விசாரனைக்கு வந்தது.
சென்னை,
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது விதிமுறைகளை மீறி மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை கண்டித்தும், மின்கட்டணம் மற்றும் பேருந்து கட்டணத்தை எதிர்த்தும் அப்போதைய எதிர்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டதை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக அரியலூரில் 9 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்துசெய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் அமைச்சர் சிவசங்கர் தரப்பு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அரசியல் உள்நோக்கத்துடன் தன்னை துன்புறுத்தும் நோக்கில் இந்த வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதால், இதனை ரத்துசெய்யவேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அமைச்சருக்கு எதிராக 9 வழக்குகளையும் ரத்துசெய்து உத்தரவிட்டார்.