நாளை 9 மின்சார ரெயில்கள் ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு


நாளை 9 மின்சார ரெயில்கள் ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Sep 2023 10:37 AM GMT (Updated: 12 Sep 2023 11:20 AM GMT)

சென்னை மூர் மார்க்கெட் - திருத்தணி செல்லக்கூடிய மின்சார ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பராமரிப்பு பணி காரணமாக நாளை 9 மின்சார ரெயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை ரெயில்வே கோட்டம் சார்பில் தெரிவித்திருப்பதாவது:

சென்னை மூர் மார்க்கெட் - அரக்கோணம், சென்னை மூர் மார்க்கெட் - திருத்தணி செல்லக்கூடிய மின்சார ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம் -சென்னை மூர் மார்க்கெட், திருத்தணி -சென்னை மூர் மார்க்கெட் உள்ளிட்ட மின்சார ரெயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூர் மார்க்கெட்டில் இருந்து திருப்பதி செல்லும் சிறப்பு மின்சார ரெயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


Next Story