தண்டவாள சீரமைப்புபணி காரணமாக 9 மின்சார ரெயில்கள் இன்று ரத்து


தண்டவாள சீரமைப்புபணி காரணமாக 9 மின்சார ரெயில்கள் இன்று ரத்து
x

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை

அரக்கோணம் வழித்தடத்தில் தண்டவாள சீரமைப்பு பணி நடைபெறுவதால், இன்று (புதன் கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 9 மின்சார ரெயில்கள் சேவை ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக பயணிகள் சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று, காலை 8.20 மணிக்கு சென்னை சென்டிரல் - கடம்பத்தூர், காலை 9.10 மணிக்கு சென்னை சென்டிரல் - திருவள்ளூர், காலை 10 மணிக்கு சென்னை சென்டிரல் - திருவள்ளூர், காலை 10.25 மணிக்கு கடம்பத்தூர் - சென்னை சென்டிரல், காலை 11 மணிக்கு சென்னை சென்டிரல் - கடம்பத்தூர், காலை 11.10 மணிக்கு திருவள்ளூர் - சென்னை சென்டிரல், காலை 11.35 மணிக்கு கடம்பத்தூர் - சென்னை சென்டிரல், மதியம் 12.35 மணிக்கு திருவள்ளூர் - சென்னை சென்டிரல், மதியம் 1.25 மணிக்கு கடம்பத்தூர் - சென்னை சென்டிரல் ஆகிய நிலையங்களுக்கு இடையே பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதேபோல காலை 9.50 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06727) பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக காலை 9.50 மணிக்கு சென்னை சென்டிரல் - கடம்பத்தூர் இடையே பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளது.


Next Story