9 ஆடுகள் விஷம் வைத்து சாகடிப்பு


9 ஆடுகள் விஷம் வைத்து சாகடிப்பு
x

நெல்லையில் 9 ஆடுகள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை வேப்பங்குளம் மணி நகரை சேர்ந்தவர் பெருமாள், சப்பாணி ஆகியோரின் ஆடுகள் மற்றும் சத்திரம் புதுக்குளத்தைச் சேர்ந்த சந்தன் ராஜ் என்பவருக்கு சொந்தமான மாடுகள் ஆகியவை சத்திரம் புதுக்குளம் பகுதியில் உள்ள கோபால் என்பவரது தோட்டத்தில் நேற்று மேய்ந்து கொண்டிருந்தன.

இந்நிலையில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு மற்றும் மாடுகள் அடுத்தடுத்து வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக இதுகுறித்து நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரி டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு டாக்டர்கள் விரைந்து வந்தனர். மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் 9 ஆடுகள் உயிரிழந்தன. 6 மாடுகள் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. இதுகுறித்து தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story