டெய்லரிடம் ரூ.9 லட்சம் மோசடி


டெய்லரிடம் ரூ.9 லட்சம் மோசடி
x

ெரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி டெய்லரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்ததாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சிவகங்கை

ெரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி டெய்லரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்ததாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ரூ.9 லட்சம்

மானாமதுரையை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 53). டெய்லர். இவருடைய மகன் பி.இ. படித்துள்ளார். இவருக்கு ெரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருச்சி துறையூரை சேர்ந்த பிரகாஷ், சென்னையை சேர்ந்த சுபாஷ் மற்றும் டெல்லியை சேர்ந்த கிஷோர் ஆகியோர் ரூ.9 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் அவர்கள் வேலையும் வாங்கி தரவில்லை, வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லை என தெரிகிறது.

3 பேர் மீது வழக்கு

இது தொடர்பாக குருமூர்த்தி சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமாரிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி பிரகாஷ், சுபாஷ், கிஷோர், ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Next Story