பஞ்சாயத்து துணைத்தலைவர் கையெழுத்தை போட்டு ரூ.9 லட்சம் மோசடி


பஞ்சாயத்து துணைத்தலைவர் கையெழுத்தை போட்டு ரூ.9 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 23 Sept 2022 12:15 AM IST (Updated: 23 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே பஞ்சாயத்து துணைத்தலைவர் கையெழுத்தை போட்டு ரூ.9 லட்சம் மோசடி செய்ததாக தலைவி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள பெருமாள்பட்டி பஞ்சாயத்தில் துணைத்தலைவராக இருந்து வருபவர் ரமேஷ்குமார் மனைவி மாரியம்மாள்.

இந்தநிலையில், தனது கையெழுத்தை போலியாக போட்டு பஞ்சாயத்து தலைவி குருவம்மாள், அவரது கணவர் காளிராஜ், பஞ்சாயத்து செயலாளர் சீனியம்மாள் ஆகியோர் ரூ.9 லட்சத்தை `செக்' மூலம் வங்கியிலிருந்து எடுத்து மோசடி செய்ததாக கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் பஞ்சாயத்து துணைத்தலைவி மாரியம்மாள் புகார் அளித்தார். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story