ரூ.9¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


ரூ.9¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x

ரூ.9¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

செம்பட்டு:

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணி ஒருவரை சோதனை செய்தபோது அவர் உடலில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவர் உடலில் மறைத்து எடுத்து வந்த 161 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story