மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு மற்றும் கல்வீச்சு தொடர்பான வழக்கில் மேலும் 9 பேர் கைது
மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு மற்றும் கல்வீச்சு தொடர்பான வழக்கில் மேலும் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீடுகள், வாகனங்கள் மீது வீசிய சம்பவங்கள் தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் 5 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 4 பேரும், சேலம், மதுரையில் தலா இரண்டு பேரும், திண்டுக்கல்லில் ஒருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு மற்றும் கல்வீச்சு தொடர்பான வழக்கில் கோவை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே 11 வழக்குகளில் 14 பேர் கைதான நிலையில் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story