யானை தந்தத்தை விற்க முயன்ற 9 பேர் கைது


யானை தந்தத்தை விற்க முயன்ற 9 பேர் கைது
x

யானை தந்தத்தை விற்க முயன்ற 9 பேர் கைது

கோயம்புத்தூர்

காரமடை,ஜூலை

காரமடை அருகே காட்டு யானைதந்தத்தை விற்க முயன்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவல்

கோவையை அடுத்த காரமடை பகுதியில் யானை தந்தங்கள் விற்பனைக்கு உள்ளதாக கோவை மாவட்ட வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உஷார் அடைந்தனர். இதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர், சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில் காரமடை அருகே கோடதாசனூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜன் (வயது 51), அதே பகுதியை சேர்ந்த பிரபு (27), ஏழுசுழி கிராமத்தை சேர்ந்த வெள்ளிங்கிரி (40), ராமமூர்த்தி ( 39), குமரேசன் (31), அஜீத் (25), ரஞ்சித் (25) காரமடையை சேர்ந்த ஆறுமுகம் ( 56) சிறுமுகை சேர்ந்த பாபு ( 48) ஆகியோர் என்பதும், அவர்கள் காட்டுயானை தந்தத்தை வைத்திருந்ததும், அதனை விற்பதற்கு தயாராக இருந்ததும் தெரியவந்தது.

பறிமுதல்

மேலும் விசாரணை நடத்தியபோது, அவர்கள் காரமடை அருேக உள்ள கட்டாஞ்சிமலையடிவாரத்தில் இறந்துகிடந்த ஆண் யானையின் உடலில் இருந்து 3 மாதங்களுக்கு முன் அந்த தந்தங்களை எடுத்து வந்ததும் தெரியந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்த 2 யானைத்தந்தங்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் வனத்துறையினர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து, இறந்த யானையின் மண்டை ஓடு மற்றும் எலும்புகளை சேகரித்து எடுத்து வந்தனர். இது தொடர்பாக கும்பலை சேர்ந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


Next Story