மரக்காணம் அருகே பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து கண்டக்டர் உள்பட 9 பேர் படுகாயம்


மரக்காணம் அருகே பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து கண்டக்டர் உள்பட 9 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 25 Jun 2023 12:15 AM IST (Updated: 25 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மரக்காணம் அருகே பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்தில் கண்டக்டர் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

விழுப்புரம்

மரக்காணம்,

நாகப்பட்டினத்தில் இருந்து தமிழக அரசு பஸ் சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சை கும்பகோணத்தை சேர்ந்த டிரைவர் நடராஜ் வயது (வயது 40) ஓட்டிச் சென்றார்.

பஸ்சில் நாகப்பட்டினம், வேதாரண்யம் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 24 பயணிகள் பயணம் செய்தனர்.

இந்த பஸ் கிழக்கு கடற்கரை சாலையில் மரக்காணம் அருகே தாழங்காடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக சாலையோர 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதனால் பஸ்சில் சென்ற பயணிகள் கூச்சலிட்டு அலறினர். சத்தம் கேட்ட அப்பகுதி பொதுமக்கள் ஓடிச்சென்று பயணிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் மரக்காணம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை பொதுமக்களின் உதவியுடன் மீட்டனர்.

9 பேர் படுகாயம்

இந்த விபத்தில் பஸ் கண்டக்டர் ஸ்ரீராம் (57), காரைக்கால் பகுதியை சேர்ந்த சந்தியா (29), வேதாரண்யத்தை சேர்ந்த பாபா செல்வம் (35), நாகப்பட்டினத்தை சேர்ந்த கார்த்திக் (25), சாதிக் (40), ராஜேந்திரன் (50) உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் மரக்காணம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் விபத்துக்குள்ளான பஸ்சை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.


Next Story