மண் கடத்திய 9 பேர் கைது


மண் கடத்திய 9 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jun 2023 12:15 AM IST (Updated: 18 Jun 2023 11:33 AM IST)
t-max-icont-min-icon

மல்லசமுத்திரம் அருகே மண் கடத்திய 9 பேர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல்

திருச்செங்கோடு

மல்லசமுத்திரம் அருகே மேல்முகம் கிராமம் வடுகபாளையம் ஏரியில் மண் வெட்டி டிராக்டர்கள் மூலம் கடத்தி செல்வதாக மல்லசமுத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது 2 பொக்லைன் எந்திர மூலம் 8 டிராக்டர்களில் மண் வெட்டி கடத்த முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் மண் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விநாயகமூர்த்தி, தங்கராஜ், கவுதம், பூபதி, பூபதி ராஜா, ராஜவேல், கார்த்திக்குமார், ஆனந்த், பிரகாஷ் ஆகியோர் என்பதும் அவர்கள் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து 2 பொக்லைன் எந்திரம், 8 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story