சூதாடிய 9 பேர் கைது


சூதாடிய 9 பேர் கைது
x
தினத்தந்தி 27 Feb 2023 1:00 AM IST (Updated: 27 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

காரிமங்கலம்:-

காரிமங்கலம் பகுதியில் சூதாட்டம் நடப்பதாக வந்த தகவலை தொடர்ந்து பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்து, காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜவகர்குமார், மதியழகன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கரகப்பட்டி ஏரி பகுதியில் பணம் வைத்து சூதாடிய சின்னச்சாமி, முனியப்பன், பாக்கியராஜ், ஜெகதீசன், ராஜவேல், பிரதாப், ஜெகதாப் பழனிசாமி, ரமேஷ், இளங்கோவன் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரத்து 500 மற்றும் 9 மோட்டார் சைக்கிள் பறிமுதல்செய்யப்பட்டது.


Next Story