பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூர் சின்ன ஆண்டாங்கோவில் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் உள்ள பேக்கரி அருகே பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த வாங்கப்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 43), நரசிம்மபுரத்தை சேர்ந்த குமார் (50), பழையபஸ் நிலையத்தை சேர்ந்த சேகர் (42), பாரதியார் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (44), வெங்கமேட்டை சேர்ந்த யுவராஜ், (24), ராஜா (30), பசுபதிபாளையத்தை சேர்ந்த மகேந்திரன், (30), தஞ்சாவூரை சேர்ச்த முருகேசன் (21), சின்ன ஆண்டாங்கோவிலை சேர்ந்த அமர்நாத் (38) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.55 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story