மது விற்ற 9 பேர் கைது
கரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி மது விற்ற 9 பேரை கைது செய்தனர்.
போலீசார் சோதனை
கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மதுபானங்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கரூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் தலைமையிலான போலீசார் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
9 பேர் கைது
இதில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மது விற்றதாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 32), கரூர் திருக்காம்புலியூரை சேர்ந்த முனுசாமி (55), நாமக்கல்லை சேர்ந்த சேகர் (49) குளித்தலையை சேர்ந்த மலர்கொடி (39), கிருஷ்ணராயபுரம் வயலூரை சேர்ந்த தனம் (53), மண்மங்கலத்தை சேர்ந்த பிரியா (45), கரூர் மேற்கு பிரதட்சணம்ரோட்டை சேர்ந்த பாபா (45), வெள்ளியணையை சேர்ந்த கோபிநாத் (27), தாந்தோணி மலையை சேர்ந்த செந்தில் (35) ஆகிய 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மொத்தம் 54 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 5 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டன.