மது விற்ற 9 பேர் கைது


மது விற்ற 9 பேர் கைது
x

மது விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

பாலவிடுதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அய்யம்மபாளையத்தை சோ்ந்த பிச்சை (வயது 60), சுக்காம்பட்டியை சேர்ந்த கனகராஜ் (23), மோளப்பட்டியை சேர்ந்த பொன்னன் மனைவி சின்னத்தாய் (65), இடையப்பட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி (42) ஆகியோர் அந்தந்த பகுதிகளில் மது விற்றதாக 4 பேரைபோலீசார் கைது செய்தனர்.

இதேபோல் தென்னிலை அருகே கருஞ்செல்லி பாளையத்தில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த துரைசாமி (40) என்பவர் மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை தென்னிலை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் குளித்தலை அருகே புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த வீரமலை (57), மேலகுட்டப்பட்டி பகுதியை சேர்ந்த ராமன் (51), பெரியமலையாண்டி பட்டியை சேர்ந்த பழனியாண்டி (34), நடுப்பட்டி பாலம் பகுதியை சேர்ந்த கண்ணன் (59) ஆகிய 4 பேரையும் மது விற்றதாக குளித்தலை போலீசார் கைது செய்தனர்.


Next Story